Advertisment

சர்ப்ரைஸாக அப்டேட் கொடுத்த மம்மூட்டி - ஜோதிகா படக்குழு

mammooty jothika kathal movie release update

மலையாளத்தில் மம்மூட்டி, ஜோதிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படம் 'காதல் - தி கோர்'. இந்தப் படத்தை ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். இப்படம் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாளத்தில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ஜோதிகா. மேலும் முன்னணி நட்சத்திரமான மம்மூட்டியுடன் முதல் முறையாக நடித்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisment

இந்த படம் கோவாவில் வருகிற 20 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடக்கும் 54வது கோவா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. மேலும் டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதிகுறித்த அறிவிப்பை தற்போது சர்ப்ரைஸாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

Mammootty mollywood
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe