Advertisment

மம்முட்டியின் லாக்டவுன் சவால்... துல்கர் சல்மான் சுவாரஸ்ய தகவல்!

dq

தென்னிந்திய சினிமாவின்அனைத்து சினிமா துறைகளிலும் பிரபலமானவர் நடிகர் துல்கர் சல்மான். மலையாள ரசிகர்களுக்கு இணையாக மற்ற மொழி பேசுபவர்களிடமும் ரசிகர்களை சம்பாதித்திருப்பவர் துல்கர்.

Advertisment

இந்தியா முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் லாக்டவுன் நடைமுறையில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவைகள் இன்றி யாராக இருந்தாலும் வெளியே செல்லமுடியாமல் இருந்து வருகின்றனர். மேலும், இந்த காலகட்டத்தை பயன்படுத்தி நடிகர் மம்முட்டி எவ்வளவு காலம் என்னால் வீட்டிற்குள்ளேயே இருக்க முடியும் என்று சவால்விடுத்து, அதை கடைபிடித்து வருகிறார் என்று துல்கர் தெரிவித்துள்ளார்.

Advertisment

அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மம்முட்டி குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால் இருக்க முடியும் என்பதை பார்க்க விரும்புவதாகவும், தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்தபோது அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரைப் போல் என்னால் வீட்டில் இருக்க முடியவில்லை என்றும், சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் துல்கர் கூறியுள்ளார்.

dulquer salman Mammootty
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe