Mammootty's photo sold for millions!

மலையாள சூப்பர் ஸ்டாரான மம்மூட்டி, பல படங்களில் நடித்து வெற்றியைக் கொடுத்துள்ளார். தமிழிலும், அழகன், ஆனந்தம், தளபதி, பேரன்பு போன்ற நல்ல படங்களிலும் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த ‘காதல் தி கோர்’ மற்றும் ‘பிரம்மயுகம்’ ஆகிய இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனைப் படைத்துள்ளது.

Advertisment

தற்போது மம்மூட்டி, கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி ஷெட்டியோடி இணைந்து ‘டர்போ’ என்ற படத்திலும், ‘பஸூக்கா’ படத்திலும் நடித்து வருகிறார். மம்மூட்டிசினிமாவைத்தாண்டி புகைப்படங்களும் எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அங்குள்ள இயற்கையான விஷயங்களையும், அழகான விஷயங்களையும் புகைப்படங்களாக எடுத்து அவர் தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்வார்.

Advertisment

இந்த நிலையில், சமீபத்தில் மம்மூட்டி எடுத்த இந்திய புல்புல் பறவையின் புகைப்படம் லட்சக்கணக்கில் ஏலம் போயுள்ளது. மறைந்த எழுத்தாளரான இந்துச்சூடன்சார்பாக கொச்சி தர்பார் ஆர்ட் கேலரி புகைப்படக் கண்காட்சி ஒன்று நடத்தப்பட்டது. அதில், மம்மூட்டி எடுத்த புல்புல் பறவை புகைப்படம் ஏலத்துக்காக வைக்கப்பட்டிருந்தது. அவர் எடுத்த புகைப்படத்தை ஏலத்தின் ஆரம்ப விலையாக ரூ.1 லட்சத்தில் இருந்து தொடங்கப்பட்டது. பிரபல தொழிலதிபரான அச்சு உல்லட்டில், மம்மூட்டியின் புகைப்படத்தை ரூ.3 லட்சத்திற்கு ஏலத்தில் வாங்கியுள்ளார்.