Advertisment

மம்மூட்டியின் தாயார் பாத்திமா காலமானார்

Mammootty's mother Fathima passed away

பிரபலமான மலையாள நடிகரும் தமிழில் குறிப்பிட்டு சொல்லும்படியான பல படங்களில் நடித்தவர் மம்மூட்டி. தனது குணச்சித்திர நடிப்பால் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். இந்நிலையில்,மம்மூட்டியின் தாயார் பாத்திமாவயதுமூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 93. வயது முதிர்வின் காரணமாகவும் நோயால் பாதிக்கப்பட்டும் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

Advertisment

பாத்திமாவின் மறைவையொட்டி மம்மூட்டிக்கு திரையுலகினர்ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். மம்மூட்டியின் மகன் பிரபல நடிகர் துல்கர் சல்மானுக்கும் திரையுலகினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் ஆறுதல் கூறிவருகிறார்கள். பாத்திமா இறுதிச் சடங்கு இன்று மாலை 4 மணிக்கு செம்பை பகுதியில் உள்ள முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. சமூக வலைத்தளங்கள் வழியாகவும் பலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். கேரள திரையுலகவட்டாரத்தில் மம்மூட்டியின் தாயார் மற்றும் துல்கர் சல்மானின் பாட்டி மறைவின்சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisment

dulquer salman Mammootty passed away
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe