'காதல்' படத்திற்காக கடினமாக ஒர்க் அவுட் செய்யும் ஜோதிகா

mammootty kaathal movie jyotika gym video goes viral on internet

தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்ஜோதிகா. ரஜினி, கமல், அஜித், விஜய் என டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். இதனிடையே பூவெல்லாம் கேட்டுப்பார், பேரழகன், மாயாவி, சில்லுனு ஒரு காதல்உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக நடிப்பை விட்டு விலகியிருந்த ஜோதிகா '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். பின்பு நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் ஜோதிகா பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான பொன்மகள் வந்தாள், ராட்சஷிஉள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் ஜோதிகா மலையாளத்தில் மம்மூட்டி நடிப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். 'காதல்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தை இயக்கிய ஜோ பேபி இயக்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று முன்தினம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. இதனைத்தொடந்து ஜோதிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பகிர்ந்திருந்த நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

Mammootty
இதையும் படியுங்கள்
Subscribe