mamitha biju to act in vijay next film

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

Advertisment

இப்படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியானதால், விஜய்யின் அடுத்த படம் கடைசி படமாக பார்க்கப்படுகிறது. இப்படம் விஜய்யின் 69ஆவது படமாக உருவாகும் நிலையில் அ.வினோத் இப்படத்தை இயக்குவதாக தகவல் உலா வருகிறது. இப்படத்தில் திரிஷா, சமந்தா, மிருணாள்தாக்கூர், பாலிவுட் நடிகை ஆலியா பட், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகிய நடிகைகளிடம் படக்குழு கதாநாயகி கதாபாத்திரம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது.

Advertisment

mamitha biju to act in vijay next film

இந்த நிலையில் இப்படத்தில் இன்னொரு நடிகை இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள இளம் நடிகை மமிதா பைஜு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மமிதா பைஜு இந்தாண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்ற பிரேமலு படம் மூலம் பிரபலமானார். பின்பு தமிழில் ஜி.வி. பிரகாஷின் ரெபல் மூலம் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.