Advertisment

ரசிகர்கள் ஆரவாரம் - கூட்டத்தில் சிக்கிய மமிதா பைஜு 

mamitha baiju chennai crowd event

Advertisment

மலையாளத்தில் வரதன், ஆபரேஷன் ஜாவா, சூப்பர் ஷரண்யா உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளவர் நடிகை மமிதா பைஜு. கடந்த பிப்ரவரியில் வெளியான பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானார் மமிதா பைஜு.

இதையடுத்து தமிழில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் கடந்த மார்ச்சில் வெளியான ரெபல் படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து விஷ்ணு விஷால் - ராம் குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டானதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு மாலுக்கு நகைக் கட திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்தார். அப்போது அவரை காண ஏகப்பட்ட ரசிகர்கள் திரண்டுவிட்டனர்.

மேலும் ஆராவாரம் செய்து மமிதா பைஜுடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். கூட்டத்தில் மமிதா பைஜு சிக்கியதால் அங்குச் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. பின்பு பாதுகாப்பாக உள்ளே சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Chennai Mamitha Baiju
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe