style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="9350773771" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணியில் நான்காவது படமாக உருவாகும் ‘மாமனிதன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக இயக்குனர் சீனு ராமசாமி சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். அதில்... "மாமனிதன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதற்கு படத்தில் நடித்த கலைஞர்கள் மற்றும் என்னுடைய குழுவின் அயராத உழைப்பே காரணம். இசைஞானியின் பாடல்களும், பின்னணி இசையையும் என்னுடைய படம் மூலம் காண ஆவலாக உள்ளேன். படத்தின் டப்பிங் பணிகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது" என பதிவிட்டுள்ளார். விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடிக்க்கும் இப்படத்தில் காயத்ரி நாயகியாக நடிக்கிறார். மேலும் படத்திற்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன் ஷங்கர் ராஜா என மூன்று பேரும் இணைந்து இசையமைக்கின்றனர்.