ADVERTISEMENT

மாமனிதன் படத்தின் தடையை நீக்கி நீதிமன்றம் உத்தரவு....

03:42 PM Dec 14, 2020 | santhoshkumar

ADVERTISEMENT

ADVERTISEMENT

யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான படம் மாமனிதன். தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணி நான்காவது முறையாக இந்தப் படத்தில் இணைந்துள்ளது.

இளையராஜா - யுவன் சங்கர் ராஜா இணைந்து மாமனிதன் படத்திற்கு இசையமைத்துள்ளனர். கடந்த ஃபிப்ரவரி மாதம் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படம் எப்போது ரிலீஸ் என்கிற கேள்வியை பலரும் முன் வைத்தனர். இளையராஜாவுக்கும் இயக்குனர் சீனுராமசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாகப் படத்தில் ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், இந்த படம் வெளியாவதில் என்ன சிக்கல் எனப் படக்குழு எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில், உரிய விநியோக உரிமை தரவில்லை எனவும் படத்திற்கு தடைகோரியும் அபிராமி மால் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

தற்போது விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், படத்தின் தடை நீக்கி சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் விளக்கமளித்துள்ள யுவன் சங்கர் ராஜா, மாமனிதன் படத்தின் விநியோகம் சம்பந்தமாக அபிராமி நிறுவனத்துடன் எந்த ஒப்பந்தமும் இல்லை எனவும் கிளாப் நிறுவனத்தின் ஒப்பந்தத்திற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் இப்படம் திரையரங்கிலோ அல்லது ஓடிடியிலோ ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT