'Mamanithan' - get award at another  international film festivals

Advertisment

சீனுராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் 'மாமனிதன்'. இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த்,ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன்படத்தைப்பாராட்டியிருந்தனர். மேலும் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம்விருதுகளைப்பெற்று வருகிறது. அந்த வகையில் டோக்கியோ திரைப்பட விருதுகள் 22-ல் சிறந்தஆசியத்திரைப்படத்திற்கான விருது, தாக்குர்சர்வதேச திரைப்பட விழாவில் 3 விருதை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வாங்கியுள்ளது. அதன் படி 16வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் என்ற பிரிவில் விருது பெற்றுள்ளது. இந்த விருதினைசீனுராமசாமி பெற்றுக்கொண்டார். மேலும்ஆஹாஓடிடிதளத்தில் வெளியான இப்படம் 3மில்லியன்பார்வையாளர்களைகடந்து சாதனை படைத்துள்ளது.இதனைபடக்குழுகேக்வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பானபுகைப்படங்களைதனதுட்விட்டர்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்சீனுராமசாமி.