/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/malvi.jpg)
‘குமாரி 18 ப்ளஸ்' என்னும் தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் மால்வி மல்ஹோத்ரா. இதன்பின் நிறைய தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். இந்தியில், 'ஹோட்டல் மாலினி' என்றொரு படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், சினிமா தயாரிப்பு தொடர்பாக, தயாரிப்பாளர் யோகேஷ் குமாருடன் மால்விக்குப் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசியுள்ளனர்.
இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று யோகேஷ் குமார், நடிகை மால்வியிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் நடிகை மால்வி திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதன்பின் யோகேஷ் குமாரிடம் பேச்சுவார்தையும் குறைத்துக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் யோகேஷ்,நடிகை மால்வி நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில்,மும்பையில் உள்ள ஒரு கஃபேயில் இருந்து காரில் வீட்டுக்குச் செல்லும்போது, நான்கு முறை கத்தியால் அவரைக் குத்திவிட்டுத் தப்பி ஓடியுள்ளார்.
இதில் காயமடைந்த மால்வி, மும்பையில் உள்ள திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது மால்வியின் உடல்நிலை சீராக இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தற்போது யோகேஷ் குமார் தலைமறைவாக இருக்கிறார். அவரை பிடிக்க போலீஸார் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மால்வி பேசுகையில், “தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான ரேகா சர்மா இந்த விஷயத்தில் தலையிட்டு எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கோருகிறேன். நானும் மாண்டி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவள் என்பதால் கங்கணா ரணாவத்தும் எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.
மும்பை நகரில் எனக்கு நடந்த இந்தச் சம்பவத்தை நான் என் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. எனவே அநீதிக்கு எதிரான எனது போராட்டத்தில் இவர்களின் ஆதரவு வேண்டும்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)