/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/283_11.jpg)
பாலிவுட்டில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வந்தவர் மல்லிகா ராஜ்புத். உத்தரப்பிதேசம் கல்தான்பூரை சேர்ந்த இவர், காலமாகியுள்ளார். நேற்று அவரது அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி அவரது உடல்மீட்கப்பட்டுள்ளது. பின்பு சுல்தான்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மல்லிகா ராஜ்புத்தின் உடல் உடற்கூறாய்விற்கு அனுப்பட்டது.
அதன் அறிக்கை வந்த பின் மரணம் குறித்து வெளியாகும் என போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் முதற்கட்ட தகவலின் படி தற்கொலையாக இந்த மரணம் இருக்குமென கூறப்படுகிறது. இவரது மரணம் பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் அளித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து மல்லிகா ராஜ்புத்தின் தாயார் கூறுகையில், “நாங்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்ததால், மல்லிகாவின் மரணம் எப்போது நடந்தது என்று தெரியவில்லை” என்றார்.
மல்லிகா ராஜ்புத் 2014ஆம் ஆண்டு கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ரிவால்வர் ராணி படத்தில் துணை வேடத்தில் நடித்திருந்தார். திரைத்துறை மட்டுமல்லாமல், அரசியலிலும் ஈடுபட்டார். 2017 இல் பாஜகவில் இணைந்து, 2018லே அக்கட்சியிலிருந்து விலகிவிட்டார். மேலும் பிரதமர் மோடியை மையமாக வைத்து ‘ஷாசக்’ என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)