விஷ்ணு சசி சங்கர் இயக்கத்தில் பிரியா வேணு மற்றும் நீதா பின்டோ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாளிகப்புரம். இப்படம் கடந்த வருடம்டிசம்பர் மாதம் வெளியாகியநிலையில் பலரது கவனத்தை ஈர்த்தது. கல்யாணி என்ற எட்டு வயது சிறுமி சபரிமலைக்குச் செல்ல முயல்வதைப் பற்றிச் சொல்லும் படமாக அமைந்திருந்தது.
இப்படத்தில் குழந்தை நட்சத்திரங்களாக தேவானந்தனா மற்றும் ஸ்ரீபாத் யான் ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் உன்னி முகுந்தன், சைஜு குருப், ரமேஷ் பிஷாரடி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 15 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.