
இந்தாண்டு மலையாளத்தில் ஆரம்பம் முதல் பிரமயுகம், பிரேமலு, மஞ்சும்மல் பாய்ஸ், ஆவேஷம், கிஷ்கிந்தா காண்டம் வரை பல வெற்றிப் படங்கள் வெளியாகியிருந்தது. மேலும் வசூல் ரீதியாக ரூ.200 கோடி கிளப்பில் நுழைந்தது. மஞ்சும்மல் பாய்ஸ் படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்தது. மொத்தம் ரூ.240 கோடி என கூறப்படுகிறது. அதே போல், பிரேமலு, ஆடுஜீவிதம் உள்ளிட்ட படங்கள் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது.
இந்த நிலையில் கேரள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், இந்தாண்டு வெளியான படங்களில் ரூ.700 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அச்சங்கத்தின் செயலாளர் பி. ராகேஷ் குறிப்பிட்டிருப்பதாவது, “இந்த ஆண்டில் வெளியான ஐந்து பழைய படங்களின் மறு வெளியீடு உட்பட மொத்தம் 204 படங்களில் 26 படங்கள் மட்டுமே ஹிட், சூப்பர் ஹிட், ஆவரேஜ் ஹிட் அடைந்துள்ளது. மொத்த படங்களின் தயாரிப்பு செலவான ரூ.1,000 கோடியில், ரூ.300 கோடி மட்டுமே லாபம் கிடைத்திருக்கிறது. மீதமுள்ள ரூ.700 கோடி நஷ்டம் அடைந்துள்ளது” என்றுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை அங்கு ஏற்பட்டுள்ளது.