இயக்குனர் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடிப்பில் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியான படம் பேரன்பு. இந்த படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தவர் திருநங்கையான அஞ்சலி அமீர். இவர் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். சென்றாண்டு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்துகொண்டார். சமீபத்தில்கூட இவரது வாழ்க்கையை படமாக்க மலையாள சினிமாத்துறையில் முயற்சி நடைபெறுவதாக சொல்லப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/anjali-ameer.jpg)
இந்நிலையில் அஞ்சலி அமீர் தனது பேஸ்புக் பக்கத்தில் திடீரென லைவ் வந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: “என்னுடைய காதலர் என்னை சித்ரவதை செய்ததால் அவருடனான உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால் அவர் தன்னுடன் வாழவில்லை என்றால் ஆசிட் ஊற்றி எரித்துக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4 லட்சம் வரை என்னுடைய பணத்தை பறித்துக் கொண்டார்.
இந்தக் கொடுமைகளை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கிறேன்” என்று அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் தெரிவித்துள்ளார் அஞ்சலி அமீர். இதனால் பலரும் அவருக்கு எந்தவித தவறான முடிவும் எடுத்துவிடாதீர்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அறிவுரை தெரிவித்து வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)