போதையில் தாறுமாறாக காரில் சென்ற நடிகை ; விரட்டி பிடித்த மக்கள் - அதிரடி காட்டிய போலீஸ்

malayalam actress aswathy babu arrest for DD

மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் சில படங்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகை அஸ்வதி பாபு. இவர் தற்போது கேரளாவில் உள்ள கொச்சியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் அஸ்வதி பாபு தனது காதலன் நவுபலுடன் நேற்று கொச்சி அருகே காரில் தாறுமாறாக சென்றுள்ளார். குறிப்பாக கொச்சி குசாட் சந்திப்பு சாலையில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த கார், பைக் மற்றும் தடுப்புகளில் உரசியபடி அதிவேகத்தில் சென்றுள்ளது. இது தொடர்பாக அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் சொல்லிவிட்டு அந்த காரை பின்தொடர்ந்தனர்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="1dc61d91-605c-48f1-afa3-c03b6ac765c9" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/Jothi-Movie-500-X-300-Ad_14.jpg" />

பின்பு அவர்களின் காரை முந்தி சென்ற சிலர் அவர்களை மறித்தனர். மறித்தவர்களிடம் இருந்து தப்பிக்க காரை அருகில் உள்ள பகுதியில் கீழ் நோக்கிச் சென்றனர். அப்போது அந்த பகுதியின் சாலையில் இருந்த கற்களில் ஏறி காரின் டயர் வெடித்தது. தப்பி செல்ல வேறுவழியில்லாமல் காரில் இருந்து இறங்கிய அஸ்வதி பாபு மற்றும் அவரது காதலனும் போதையில் காரை ஓட்டியுள்ளது தெரியவந்தது. பின்பு அங்கு இருந்தவர்களிடம் வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபட்டனர்.

காவல் துறையினர் வருவதற்குள் இருவரும் அருகில் உள்ள கடைக்குள் சென்று பொருள் வாங்குவது போல் பதுங்கிவிட்டனர். பிறகு திருக்காக்கரை பகுதியை சேர்ந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இருவரையும் கடைக்குள் நுழைந்து மடக்கிப்பிடித்தனர். பின்பு இருவரையும் மருத்துவ பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் இருவருமே போதையில் இருந்தது தெரியவந்தது உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து போலீஸ் இருவரையும் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனிடையே அஸ்வதி பாபு கடந்த 2018-ஆம் ஆண்டு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Subscribe