விக்ரம் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் மலையாள நடிகர்

malayalam actor suraj in chiyaan 62

விக்ரம் தற்போது பா. ரஞ்சித் இயக்கும் தங்கலான் படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் உருவாகும் இப்படம் ஏப்ரலில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதுவும் தற்போது தள்ளிப் போகவுள்ளதாகக் கூறப்படுகிறது.இதனிடையே விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் நீண்ட இழுபறிக்குப் பின் இம்மாதம் வெளியாகும் என கெளதம் மேனன் தெரிவித்திருந்தார். அதன் பிறகு எந்த அப்டேட்டும் படக்குழு வெளியிடவில்லை.

இதனைத்தொடர்ந்து தனது 62வது படத்திற்காக சித்தா பட இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் கூட்டணி வைத்துள்ளார். ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்த நிலையில் எஸ்.ஜே சூர்யா படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்தில் படக்குழு தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து சுராஜ் வெஞ்சாரமூடு இணைந்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் மலையாளத்திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, சிறந்த நகைச்சுவை நடிகருக்கான கேரள மாநில விருதை மூன்று முறையும், 2016ம் ஆண்டில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்றுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார்.படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில் தொடங்கவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Chiyaan 62
இதையும் படியுங்கள்
Subscribe