/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/396_5.jpg)
மலையாளத் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகர் மேத்யூ தாமஸ். கும்பலங்கி நைட்ஸ் படம் மூலம் நடிகராகஅறிமுகமான இவர் தண்ணீர்மதன் தினங்கள், ஜோ அண்ட் ஜோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய்யின் லியோ படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். மெலும் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்ப்பைப் பெற்ற பிரேமலு படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் மேத்யூ தாமஸின் குடும்பம், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேற்று வீடு திரும்பியுள்ளனர். அப்போது கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள சாஸ்தாமுகல் என்ற இடத்தில் அவர்கள் பயணித்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரை ஓட்டி வந்த மேத்யூவின் சகோதரர் ஜான் படுகாயம் அடைந்தார். பின்பு அனைவரும்அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில், மேத்யூவின் உறவினர் பீனா டேனியல்(61) என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தச் சோகமான விபத்து மேத்யூ தாமஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)