மலையா சினிமாவில் தனக்கென பெரிய இடத்தையும், தமிழ் சினிமாவிலும் தனக்கென ஒரு இடத்தையும் வைத்திருப்பவர் நடிகர் ஜெயராம். இவர் தன்னுடைய காமெடி நடிப்பாலும், மிமிக்ரி திறமையாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

Advertisment

jayaram

தமிழில் கடைசியாக பாகமதி படத்தில் நடித்திருந்தார். இவர் நடித்திருக்கும் பார்ட்டி திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் மலையாளத்தில் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து மார்கோனி மாத்தாய் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது அல்லு அர்ஜூன் ஹீரோவாக நடிக்கும் தெலுங்கு படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக தனது உடல் எடையை 12 கிலோ குறைத்து செம ஃபிட்டாக மாறியிருக்கிறார் ஜெயராம். த்ரிவிக்ரம் இயக்கும் இந்தப் படத்தில் ஜெயராம் ஜோடியாக தபு நடிக்கிறார்.

Advertisment

உடல் எடையை குறைத்தது குறித்து ஜெயராம் கூறுகையில், “அல்லு அர்ஜூன் நடிக்கும் தெலுங்கு படத்துக்காக உடல் எடையை குறைக்கச் சொன்னார்கள். கடுமையாக உடற்பயிற்சி செய்து 2 மாதத்தில் 12 கிலோ குறைத்திருக்கிறேன். இது எனக்கு 2 வது தெலுங்கு படம். இதில் என் கேரக்டர் பற்றி தற்போது சொல்ல முடியாது”என்றார்.