Advertisment

மீண்டும் ஷங்கருடன் இணையும் பிரபல நடிகர் !

malayala actor suresh gopi again joins Shankar movie

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநரான ஷங்கர் கடைசியாக இயக்கி வந்த 'இந்தியன் 2' திரைப்படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. இப்படம் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது அடுத்த படம் பற்றியஅறிவிப்பை வெளியிட்டார். அதன்படி பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து ஷங்கர் படம் இயக்கவுள்ளார். இதில் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார். 'ராம் சரண் 15' என தற்காலிகமாகப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தைத்தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார்.

Advertisment

அதிக பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி நடிக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'ஐ' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். 'ராம் சரண் 15' படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

director Shankar
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe