“விஜய் சூப்பர் ஸ்டார்தான், ஆனால் நல்ல நடிகர் அல்ல”- பிரபல நடிகர் சர்ச்சை கருத்து

கேரளாவில் நடிகர் விஜய்க்கு அந்த மாநிலத்தின் சினி சூப்பர்ஸ்டார்களான மம்மூட்டி, மோகன் லால் அளவிற்கு செல்வாக்குள்ளது. இந்நிலையில் மலையாள நடிகர் ஒருவர் விஜய் ஒரு சூப்பர் ஸ்டார், ஆனால் சூப்பர் நடிகர் அல்ல என்று தெரிவித்துள்ளார்.

siddique

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

மலையாள சினிமாவில் 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ள நடிகர் சித்திக். பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் இவர் இணையதளம் ஒன்றில் அளித்த பேட்டியில், “ஒவ்வொரு சினிமா துறையும் சூப்பர் ஸ்டார்களை நம்பியே இருக்கிறது. 'மதுர ராஜா', 'லூசிஃபர்' போன்ற படங்களை எடுக்க மம்மூட்டி, மோகன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருப்பது அவசியம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மொத்த துறையுமே இது போன்ற நடிகர்களை நம்பித்தான் இருக்கிறது. என்னைப் போன்ற துணை நடிகர்கள் இந்த சூப்பர் ஸ்டார்களால் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம்.

மலையாள சினிமாத்துறைக்கு மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இருப்பது அதிர்ஷ்டமே. இருவருமே சூப்பர்ஸ்டார். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நிலை வேறு. விஜய் போன்றவர்கள் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் அவர் சிறந்த நடிகர் அல்ல. அவரது நட்சத்திர அந்தஸ்துதான் அவர் துறையில் உயரக் காரணம். ஆனால் கமல்ஹாசன் சிறந்த நடிகர், அதே சமயம் சூப்பர் ஸ்டார் என நான் நம்புகிறேன்” என்று சித்திக் பேசியுள்ளார்.

இக்கருத்து மலையாள சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

actor vijay
இதையும் படியுங்கள்
Subscribe