prabeesh

மலையாள சினிமாவை சேர்ந்த நடிகர் ஒருவர் ஷூட்டிங் நடைபெற்று கொண்டிருக்கும்போது, மரணமடைந்துள்ள செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisment

மலையா சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மற்றும் நடிகராக பலராலும் அறியப்பட்டவர் பிரபீஷ். மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, எடுக்கப்பட்ட குறும்பட ஷூட்டிங்கில் நடிப்பதற்காக கலந்துகொண்டுள்ளார். நடித்துகொண்டிருக்கும்போது திடீரென மயக்கமடைந்து சரிந்துள்ளார்.

Advertisment

இதனையடுத்து அவரை அழைத்து செல்ல வண்டிகள் எதுவும் இல்லாமல், பின்னர் பிரபீஷின் பேண்ட் பையில் இருந்த அவரது கார் சாவியை கண்டுபிடித்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே பிரபீஷ் காலாமானர்.

பிரபீஷின் மரணம் குறித்து ஷூட்டிங்கில் கலந்துகொண்ட ஒளிப்பதிவாளர், ''அவர், தனக்கு தொண்டை வரண்டு இருப்பதாக சொல்லி, தண்ணீர் அருந்தினார். தண்ணீர் குடித்து முடித்தவுடன் அவர் சரிந்து விழுந்துவிட்டார்'' என கூறியுள்ளார். மறைந்த நடிகருக்கு மலையாள சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.