Advertisment

பிரபல நடிகர் தூக்கிட்டு தற்கொலை; அதிர்ச்சியில் திரையுலகம்

malayala actor nt prashath passed away

பிரபல நடிகர் என்.டி பிரசாத் தனது வீட்டின் முன்பு உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மலையாள திரையுலகில் வில்லன் நடிகராக அறியப்பட்ட இவர் நிவின் பாலியின் ஆக்சன் ஹீரோ பிஜு என்ற படம் உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவருக்குதிருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

Advertisment

இந்நிலையில் கொச்சியில் கமலசேரி பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு முன்பு உள்ள மரத்தில் நடிகர் என்.டி பிரசாத் தூக்கில் தொங்கியுள்ளார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குவந்த போலீசார் அவரின் மீட்டு பிரேத பரிசோதனைக்குஅனுப்பி வைத்தனர். மன உளைச்சல் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக என்.டி பிரசாத்தின் மனைவி அவருடன் இல்லை என்றும், இறப்பதற்கு சில நாட்கள் வரை கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த சம்பவம் கேரள திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Kerala actor
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe