malavika mohanan thangalaan promotion

மலையாள சினிமாவில் 2013-ம் ஆண்டில் வெளியான "பட்டம் போலெ" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானர் மாளவிகா மோகனன். தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் நடித்தார்.

Advertisment

இதனைத் தொடர்ந்து தற்போது விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் நடித்துமுடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் ஆகஸ்ட் -15 சுதந்திர தினத்தன்று தங்கலான் திரைப்படம் திரையரங்கிற்கு வரவிருக்கிறது. இந்த படத்தின் விளம்பர பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

தங்கலான் படத்தில் ஆர்த்தி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரத்திற்கு மேக்கப் பணிகள் மட்டுமே நான்கு மணி நேரம் நடைபெற்று இருக்கிறது. படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக சிலம்பம் கற்றுக் கொண்டு சிலம்பம் சுத்தும் காட்சிகள் அதிக ரீ-டேக் போன காரணத்தினால் அவருடைய கையில் வீக்கம் ஏற்பட்டது. திரையில் அவர் காட்சியளிக்கும் அனைத்து காட்சிகளையும் சிகப்பு நிறமாகவே காட்டப்பட்டுள்ளது. அந்த சிகப்பு நிறத்தை பிரதிபலிக்கும் வகையில், தங்கலான் படம் சார்ந்த அனைத்து புரமோஷன் நிகழ்ச்சிக்கும் சிவப்பு நிற புடவையில் கலந்து கொண்டிருந்தார்.