malavika mohanan speech in thangalaan audio launch

பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ள நிலையில். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் பங்கேற்றனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் மாளவிகா மோகனன் பேசுகையில், “ஆரத்தி போன்ற ஒரு கேரக்டரை எமோஷ்னலாகாமல் என்னால் பேச முடியாது. ஒரு பைத்தியக்காரத்தனமான கேரக்டர். எனக்கு தெரிந்து இந்திய சினிமாவில் இந்த கேரக்டர் இதற்கு முன்னாடி வந்ததில்லை. எந்த ஒரு நடிகையும் இது போன்ற ஒரு கேரக்டரை ஏற்று நடித்ததில்லை. அந்த கேரக்டரை என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரஞ்சித்துக்கு நன்றி” என்றார்.

Advertisment

மலையால நடிகையான மாளவிகா மோகனன் ரஜினியின் பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்பு விஜய்யின் மாஸ்டர் படம் மூலம் பிரபலமாகி பின்ப்ய் தனுஷுடன் மாறன் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து தற்போது தங்கலான் படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்காகத் தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் அவர் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.