“மோசமான நடவடிக்கை” - மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

malavika mohanan recent post

நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் வருகிற 26ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அது தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும், தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் மாருதி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படி படங்களில் அடுத்தடுத்து தொடர்ந்து பிசியாக நடித்து வரும் மாளவிகா, சமூக வலைதளப்பக்கங்களில் ஆக்டிவாக இருப்பார். படங்களின் அப்டேட், புது ஃபோட்டோஷூட் புகைப்படங்கள், ஆகியவற்றை தாண்டி அவ்வப்போது சில சர்ச்சையான விஷயங்கள் குறித்தும் தனது கருத்தை முன்வைப்பார்.

இந்த நிலையில் ஒரு தனியார் விமான நிறுவனம் ஒன்றை குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜெய்ப்பூரில் முரட்டுத்தனமாகவும் மோசமான சேவையாகவும் இருந்தது. பணியாளர் நடவடிக்கையும் மோசமாக இருந்தது” என குறிப்பிட்டுள்ளார்.

malavika mohanan
இதையும் படியுங்கள்
Subscribe