தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், 'வடசென்னை', 'அசுரன்', 'பட்டாஸ்' ஆகிய படங்களுக்குப் பிறகு, தற்போது 'கர்ணன்' படத்திலும், 'அத்ராங்கி ரே' என்ற இந்திப் படத்திலும் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து, சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இரண்டு படங்களில்நடிக்கவுள்ளார்.சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷ் அடுத்து நடிக்கவுள்ள படம் அவரின் 43 ஆவது படமாகும்.
இப்படத்தை, 'துருவங்கள் பதினாறு', 'மாஃபியா' ஆகிய படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கவுள்ளார்,ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், எனஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தநிலையில், தற்போது படத்தின்கதாநாயகிகுறித்துஅதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம்.
We are very happy to welcome the gorgeous & talented @MalavikaM_ to our team of #D43 ?
#MalavikaJoinsD43@dhanushkraja@karthicknaren_M@gvprakashpic.twitter.com/17KjlYo1OW
— Sathya Jyothi Films (@SathyaJyothi_) October 31, 2020
தமிழில்ரஜினிகாந்தின் 'பேட்ட'படத்தின்மூலம், அறிமுகமான மாளவிகாமோகனன், இப்படத்தில்தனுஷின்ஜோடியாகிறார். இவர் ஒரு பேட்டியில்தான், தனுஷின்தீவிரரசிகை எனவும், அவருடன் நடிக்கவிரும்புவதாகவும் கூறியிருந்தார். இவர்விஜயின்ஜோடியாக'மாஸ்டர்' படத்தில்நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.