நடிகர் விஜய் உடனான அனுபவத்தைப் பகிர்ந்த மாளவிகா மோகனன்!

vijay with malavika

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நேற்று தனது 45 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து அவரது பிறந்தநாளுக்கு இந்திய சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாஸ்டர் விஜய்யுடன் நடித்த மாளவிகா மோகனன் விஜய் குறித்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார். தற்போது அந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

அதில், “மாஸ்டர் படத்திற்குப் பூஜை போட்ட நாள் அன்றுதான் விஜய் சாரை மீட் பண்ணினேன். நான் மிகவும் ஆச்சரியமாகவும் பதற்றமாகவும் அவரை சுற்றி நின்றேன். அன்றைக்கு அவருடன் பேச கொஞ்சம் வாய்ப்புகிடைத்தது. ஆனால், அடுத்த ஆறு மாதம் அவருடனான பயணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பகுதியாக மாறிவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அந்தப் பதிவில் விஜய், “அன்பானவர், பாசமானவர், பாதுகாவலர், தயிர் சாதத்தின் காதலர், நான்கு மணி நண்பர் ஆனால் இரவு முன்கூட்டியே தூங்கச் சென்றுவிடுவார். எந்தச் சூழ்நிலையிலும் நம்மிடம் இருக்கும் பாசிட்டிவ் விஷயங்கள் குறித்தே பேசுபவர். அப்படிப்பட்ட தன்மையான மனிதருக்குப் பிறந்தாநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

actor vijay malavika mohanan
இதையும் படியுங்கள்
Subscribe