நடிகை மாளவிகா மோகனன் தற்போது விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக தீவிர உடற்பயிற்சியும் சிலம்ப பயிற்சியும் மேற்கொண்டார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் இந்தியில் யுத்ரா படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயராகி வருகிறது. இப்போது தெலுங்கில் பிரபாஸின் தி ராஜா சாப் படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகரகளுடன் உரையாடினார். அவரக்ளின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு ரசிகர் ஏன் எப்போதும் கவர்ச்சி அட்ங்கிய போட்டோஷூட்களை நடத்துகிறீர்கள் என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா, “ஏனென்றால் எனக்கு கவர்சி பிடிக்கும்” என்றுள்ளார்.
இதனிடையே மாளவிகா மோகனின் கனவு கதாபாத்திரம் குறித்த கெட்கப்பட்ட கேள்விக்கு, “கேங்ஸ்டராக நடிக்க ஆசை! ஒரு பெண் கூலான கேங்க்ஸ்டராக நடிப்பதை பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்; இப்போது நான் ஆக்ஷன் சீன்களுக்கு பயிற்சி பெற்றிருப்பதால், அதை பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்” என பதிலளித்துள்ளார்.