Advertisment

'பிரேக் ஃபாஸ்ட்' படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகும் மலையாள நடிகை

malaiyalam actress rosmine tamil debut movie update

மலையாளத்தில் நடிகர் திலீப்பின் ‘பவி கேர் டேக்கர்’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகை ரோஸ்மின். அவர் இப்போது இயக்குநர் காந்தி கிருஷ்ணாவின் ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறுமுகமாகிறார். பிரமாண்டமாக உருவாகும் இந்தப் படத்தில் ரோஸ்மின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Advertisment

படம் குறித்து பேசிய ரோஸ்மின், “சில அனுபவங்கள் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை. என்னுடைய கரியரில் முக்கியமான கட்டத்தில் இருப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன். கோலிவுட்டில் எனது பயணத்தைத் தொடங்கி வைக்கும்படியான இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் காந்தி கிருஷ்ணா சாருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் எனது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கொடுத்தது மட்டுமல்லாது நிறைய புது விஷயங்களையும் கற்றுக் கொண்டேன்" என்றார்.

Advertisment

கணிதத்தில் பட்டப்படிப்பு முடித்துள்ள ரோஸ்மின் மாடலிங் துறையிலும் தடம் பதித்தார். அங்கிருந்து நடிப்புத் துறையில் நுழைந்தார். அவர் ஏற்கனவே 'மிஸ் மலபார் 2022' பட்டம் பெற்றார். அதைத் தொடர்ந்து மிஸ் குயின் கேரளா 2023 இல் முதல் இடம் மற்றும் மிஸ் சவுத் இந்தியா 2023 இல் இரண்டாவது இடமும் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe