malaiyalam actor Vinayakan will join on rajini in jailer

'அண்ணாத்த' படத்தைத் தொடர்ந்து மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். நெல்சன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடிக்க சண்டை காட்சிகளை ஸ்டண்ட் சிவா மற்றும் அவரது மகன்கள் கெவின் ஸ்டீவன் ஆகியோர் மேற்கொள்கிறார்கள். நேற்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் பிரபல மலையாள நடிகர் விநாயகன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விநாயகன் இதுவரை தமிழில் வெளியான 'திமிரு', 'சிலம்பாட்டம்', 'சிறுத்தை', 'மரியான்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment