Skip to main content

பிரபல நடிகை மலைகாவுக்கு கரோனா!

Published on 07/09/2020 | Edited on 07/09/2020

 

malaika arora

 

 

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. பிரபலங்கள் பலரும் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

 

தற்போது இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் கபூருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார் அர்ஜுன் கபூர்.

 

அந்த பதிவில், "எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அனைவரிடமும் தெரிவிப்பது என் கடமை. நான் நன்றாக இருக்கிறேன், எந்த அறிகுறியும் இல்லை. மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரையின்படி நான் வீட்டில் என்னைத் தனிமைப்படுத்தி கொண்டேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

 

வரும் நாட்களில் என் உடல்நிலை குறித்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன். இவை கணிக்க இயலாத தனித்துவமான நாட்கள். மனிதம் இந்த வைரஸை வீழ்த்தும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து அவருடைய காதலியும் நடிகையுமான மலைகா அரோராவிற்கு கரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "இன்று எனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் நான் நலமுடன் இருக்கிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. மேலும் என்னுடைய மருத்துவர் மற்றும் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் ஆதரவுக்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்