Advertisment

சினேகன் கார் மோதியதில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

snehan

பிரபல பாடலாசிரியரும் நடிகருமான சினேகன். பிக்பாஸ் சீஸன் 1 போட்டியில் பங்குபெற்ற பிறகு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.

Advertisment

கடந்த 15ஆம் தேதி இரவு புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே சவேரியார்புரத்தில் சினேகன் ஓட்டி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில், அருண் பாண்டியன் என்பவர் காயமடைந்தார். இதனையடுத்து படுகாயமடைந்த அருண்பாண்டியனை திருச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன்பின் உயர் சிகிச்சைக்காக சென்னை போரூரிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Advertisment

இதனிடையே இந்த விபத்து குறித்து விசாரித்த திருமயம் போலீஸார் கவனக்குறைவாக வாகனத்தை இயக்குதல் மற்றும் விபத்து ஏற்படுத்திய உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சினேகனிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் நேற்று மாலை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அருண் பாண்டியன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

snehan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe