Advertisment

படப்பிடிப்பிற்காகக் கட்டப்பட்ட வீடு - ஏழைக்குப் பரிசாகக் கொடுத்த படக்குழு

Makers Of Malayalam Film Anbodu Kanmani Gift House to family Built For Filming

மலையாளத்தில் அன்போடு கண்மணி என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. லிஜு தாமஸ் இயக்கியுள்ள இப்படத்தை விபின் பவித்ரன் தயாரித்துள்ளார்.இதில் அர்ஜுன் அசோகன், அனகா நாராயணன், ஜானி ஆண்டனி உள்ளிட்ட பலர் நடித்திருக்க சாமுவல் ஏபி இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள தலக்சேரி பகுதியில் நடந்தது. அங்குஒரு ஏழ்மையான வீட்டில், அந்த குடும்பத்தினரின் அனுமதியோடு படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். பின்னர் கதைக்காக அந்த இடத்தில் ஒரு புது வீட்டையே கட்டியுள்ளனர். பின்பு அதில் படமெடுத்து, மொத்த படப்பிடிப்பும் முடிந்த பின்னர்அந்த புது வீட்டை அந்த ஏழ்மையான குடும்பத்தினருக்கே பரிசாக வழங்கியுள்ளனர். அவர்களின் நிலைமை கருதி வீட்டை கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

புது வீட்டின் சாவியை நடிகரும் முன்னாள் பாஜக எம்.பியுமானசுரேஷ் கோபி, அந்த குடும்பத்தாரிடம் வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பலரது கவனத்தைப் பெற்றுள்ளது. மேலும் படக்குழுவினருக்கு பாராட்டும் குவிந்து வருகின்றது.

house mollywood Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe