Advertisment

"இந்த வாழ்வை இன்னும் தாங்கக்கூடியதாக..." - கே.கே குறித்து ஏ.ஆர் ரஹ்மான் உருக்கம்

publive-image

கிருஷ்ணகுமார் குன்னத், பிரபல பின்னணி பாடகரான இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தமிழில் ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, தேவா, வித்யாசாகர் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி 60-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள இவர் நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

அந்த வகையில் ஏ.ஆர் ரஹ்மான் கே.கே-வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்தான தனது ட்விட்டர் பக்கத்தில் , "அன்புள்ள கே.கே...என்ன அவசரம் நண்பா...உங்களைப் போன்ற திறமையான பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் இந்த வாழ்க்கையை இன்னும் தாங்கக்கூடியதாக மாற்றினார்கள்" என உருக்கமாக ஏ.ஆர் ரஹ்மான் பதிவிட்டுள்ளார்.

Advertisment

ar rahman singer kk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe