Advertisment

ராஷ்மிகாவின் பாராட்டிற்கு கனடா நாட்டு நடிகை ரிப்ளை

Maitreyi Ramakrishnan responds after Rashmika Mandanna praises

கனடா நாட்டைச்சேர்ந்தவர் நடிகை மைத்ரேயி ராமகிருஷ்ணன். இவர் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில்ஒளிபரப்பாகி வரும் 'நெவர் ஹேவ் ஐ எவர்' (Never Have I Ever) வெப் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரின் நான்காவது சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், ஒரு காட்சியில் ராஷ்மிகாவின் 'சாமி சாமி' (புஷ்பா) பாடலுக்கு நடிகை மைத்ரேயி நடனமாடுகிறார். இந்த காட்சியை சமூக வலைதளத்தில் ஒரு நபர் பதிவிட்டிருந்தார்.

Advertisment

அந்த பதிவினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா, "திகைப்பூட்டுகிறது. மிக நன்றாக நடனமாடினீர்கள். உங்களுக்கு என்னுடைய அன்பு" என குறிப்பிட்டு மைத்ரேயியை டேக் செய்து பாராட்டியிருந்தார். ராஷ்மிகாவின் பாராட்டுக்கு மைத்ரேயி ராமகிருஷ்ணன் பதிலளித்துள்ளார். அவர், “இனிமேல் நடனம் பற்றி எண்ணம் வராது” என்ற தொனியில் கிண்டலாக பதிவிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisment

Actress Canada rashmika mandana
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe