
‘சரவணன் மீனாட்சி’ என்னும் சீரியலில் மைனா என நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நந்தினி. அதன்பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார்.
இதனிடையே விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் செயல்பட்டார். தமிழ் சினிமாக்களிலும் நடித்துள்ள நந்தினி, 'வம்சம்', 'ரோமியோ ஜூலியட்', 'காஞ்சனா 3' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டுப் பிள்ளை' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவருக்கும் யோகேஸ்வரன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. நடிகர் மற்றும் நடன இயக்குநராக யோகேஸ்வரன் பணிபுரிகிறார். சில மாதங்களுக்கு முன்பு நந்தினி கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் யோகேஸ்வரன் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு நந்தினிக்கு நடைபெற்ற வளைகாப்பு நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், போட்டோ ஷூட் படங்கள் என மிகவும் வைரலாயின. இந்நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி யோகேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.