maniyarfamily

Advertisment

mahima nambiyar

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'அண்ணனுக்கு ஜே'. அறிமுக இயக்குனரான ராஜ்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் நாயகனாக தினேஷ் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதாரவி,மயில் சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அர்ரோல் கொரளி இசை அமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராக அறிமுகமாகி உள்ளார். எடிட்டிங் G .B வெங்கடேஷ் செய்துள்ளார். இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது விழாவில் நடிகை மஹிமா நம்பியார் பேசியபோது... "வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் படம் நடிப்பது சந்தோசமாக உள்ளது. இப்படத்தில் தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன். இயக்குனர் ராஜ்குமார் அவர்களுக்கு நன்றி. மேலும் இந்த படத்தில் எனது சொந்த குரலில் டப்பிங் செய்துள்ளேன்" என்றார்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">