Skip to main content

"பயந்து பயந்துதான் வேலை பார்த்தேன்" - மகிமா நம்பியார்

Published on 12/11/2022 | Edited on 12/11/2022

 

mahima nambiyar speech at naadu press meet

 

தமிழில் 'எங்கேயும் எப்போதும்' படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான எம்.சரவணன், புதிதாக இயக்கி வரும் படம் 'நாடு'. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் தர்ஷன் கதாநாயகனாகவும் மகிமா நம்பியார் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.  சிங்கம் புலி, அருள்தாஸ், ஆர்.எஸ்.சிவாஜி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசைப் பணிகளை சத்யா மேற்கொள்கிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் பத்திரிகையாளர்களைப் படக்குழு சந்தித்துள்ளது.  

 

அப்போது இயக்குநர் சரவணன் பேசுகையில், "இப்போது சினிமாவில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் ரொம்பவே புத்திசாலித்தனமான, அறிவுக்கூர்மை வாய்ந்த கதாபாத்திரங்களாகவே காட்டப்படுகின்றன. நாங்கள் அதிலிருந்து விலகி எளிய மனிதர்கள் பற்றிய கதையாக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம். இந்தப் படத்தில் மலைவாழ் மக்கள் பிரச்சனையைப் பேசி உள்ளோம். கொல்லிமலை பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. பல வருடங்களுக்கு முன்பு கொல்லிமலைக்குச் சென்றிருந்த சமயத்தில் நேரிலேயே நான் கண்ட ஒரு நிகழ்வு என் மனதைப் பாதித்தது. ரொம்ப நாட்களாக மனதிலிருந்த அந்த நிகழ்வை மையப்படுத்தி இந்தப் படத்தின் கதையை உருவாக்கினேன்” என்று கூறினார்.

 

நடிகை மகிமா நம்பியார் பேசுகையில், "இதுவரை நான் நடித்த பல படங்களில் எளிமையான கிராமத்துக் கதாபாத்திரங்களில் நடித்து இருந்தேன் அதனால் எனக்கு மேக்கப்பும் ரொம்பவே எளிமையாகவே இருக்கும். இந்தப் படத்தில் கொஞ்சம் ரிச்சாக டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அதற்காக அழகாக மேக்கப் செய்துகொண்டு வந்தால், அவரோ, இது கிராமத்தில் இருக்கும் டாக்டர் கதாபாத்திரம்... இதற்கு இவ்வளவு மேக்கப் தேவையில்லை என்று கூறி அவற்றை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீக்க வைத்து விடுவார். இதனால் ஒவ்வொரு முறை மேக்கப் போடும்போதும் சக்தி சாருக்கு பிடிக்குமா என்று யோசிக்கும் அளவுக்கு வந்து விட்டேன். என்னைப் பொறுத்தவரை அவர் ஒளிப்பதிவில் நான் பயந்து பயந்து தான் வேலை பார்த்தேன். படத்தில் என்னை விட தர்ஷன் - இன்பா கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது. ஒரு கதாநாயகன் என்கிற ஆரம்ப நிலையில் இருக்கும் தர்ஷனுக்கு இப்படி ஒரு போல்டான கேரக்டர் கிடைத்திருப்பது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும்" என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மன்னிப்பு கேட்கவில்லையென்றால் போராட்டம் நடத்துவோம்” - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய தர்ஷன்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
kannada actor dharshan women organization issue

கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் தர்ஷன். தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அந்த வகையில் தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில் கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த நிகழ்ச்சியில், பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளால் தர்ஷன் பேசியுள்ளதாக கவுடாதியர சேனே என்ற பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர், மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த நிகழ்ச்சியில் தர்ஷன், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் காதலி என சொல்லப்படும் பவித்ரா கவுடா தொடர்பாக சமூக வலைத்தளங்களில் சிலர் பேசி வந்த நிலையில், அதற்கும் விளக்கமளிக்கும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே அந்த புகார் மனுவில் கவுடாதியர சேனே அமைப்பு குறிப்பிட்டிருப்பதாவது, “தர்ஷன் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். திரையில் எந்தளவிற்கு நல்லவராக இருக்கிறாரோ அதையே நடைமுறைப்படுத்த வேண்டும். ரசிகர்களிடம் பகிரங்கமாக பேசும்போது இதுபோன்ற வார்த்தைகளை ஏன் பயன்படுத்தினார். அதற்கு அவர் விளக்கமளிக்க வேண்டும். மேலும் அந்த வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கும் அவர் மனைவிக்கும் இடையே கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பது எங்களுக்கும் தெரியும். நடிகர் தனது தவறை அறிந்து மன்னிப்பு கேட்க வேண்டும். ஆனால், அவர் அதை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. அதனால்தான் நாங்கள் மகளிர் ஆணையத்தை அணுக முடிவு செய்தோம். இதை அவர் ஏற்கவில்லை என்றால் அவரது வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மிக்ஜாம் புயல் - களத்தில் இறங்கிய ‘நாடு’ படக்குழு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

naadu movie team helped affected peoples by cyclonemichaung

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில், தாம்பரம் மற்றும் முடிச்சூர் பகுதி மக்களுக்கு நாடு திரைப்படத்தின் இயக்குநர் சரவணன் மற்றும் நடிகர் தர்ஷன் ஆகியோர் படகு மூலம் சென்று உணவு மற்றும் அடிப்படை தேவையான பொருட்களை வழங்கினார்கள். அப்போது அவர்கள் நாடு படத்தின் தலைப்பு பொருந்திய டி-ஷர்ட்டை அணிந்திருந்தனர். சரவணன் இயக்கத்தில் தர்ஷன், மஹிமா நம்பியார், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 1 ஆம் தேதி வெளியான படம் நாடு. சக்ரா மற்றும் ராஜ் தயாரித்திருந்த இப்படத்திற்கு சத்யா இசையமைத்திருந்தார்.