Advertisment

"மானம் போச்சு மரியாதை போச்சு..." - இயக்குநரின் பதிவிற்கு நடிகையின் கமெண்ட்

mahima nambiyar comment to cs amudhan tweet

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மூன்று பேரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் இயக்குநர் சி.எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக்கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை டேக் செய்துள்ளார். அந்த பதிவில், "கடினமான உழைப்பாளிகள் ரத்தம் படக்குழுவினர் மட்டுமல்ல, நடிகர்களும் சமமாக அர்ப்பணிப்புடன் உள்ளனர். இதோ மஹிமா நம்பியார் அவரது வரிகளை தீவிரமாக கற்றுக்கொண்டபோது" என ஜாலியாக கலாய்த்து குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

சி.எஸ் அமுதனின் பதிவை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அவங்க கடினமான உழைப்பை பாக்கும் போது அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு" என கேலியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மஹிமா நம்பியார், விஜய் ஆண்டனியின் பதிவிற்கு, "அய்யய்யோ. என் ஸ்டைல் ​​போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு." என கிண்டல் கலந்து பதிவிட்டுள்ளார்.

mahimanambiar vijay antony
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe