Skip to main content

"மானம் போச்சு மரியாதை போச்சு..." - இயக்குநரின் பதிவிற்கு நடிகையின் கமெண்ட்

Published on 07/10/2022 | Edited on 07/10/2022

 

mahima nambiyar comment to cs amudhan tweet

 

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மூன்று பேரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் இயக்குநர் சி.எஸ் அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை மஹிமா நம்பியார் தூங்கிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவரை டேக் செய்துள்ளார். அந்த பதிவில், "கடினமான உழைப்பாளிகள் ரத்தம் படக்குழுவினர் மட்டுமல்ல, நடிகர்களும் சமமாக அர்ப்பணிப்புடன் உள்ளனர். இதோ மஹிமா நம்பியார் அவரது வரிகளை தீவிரமாக கற்றுக்கொண்டபோது" என ஜாலியாக கலாய்த்து குறிப்பிட்டுள்ளார்.  

 

சி.எஸ் அமுதனின் பதிவை விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "அவங்க கடினமான உழைப்பை பாக்கும் போது அப்புடியே என்ன பாக்குற மாறியே இருக்கு" என கேலியுடன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து மஹிமா நம்பியார், விஜய் ஆண்டனியின் பதிவிற்கு, "அய்யய்யோ. என் ஸ்டைல் ​​போச்சு மானம் போச்சு மரியாதை போச்சு எல்லாமே போச்சு." என கிண்டல் கலந்து பதிவிட்டுள்ளார். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓட்டு தான் நம் வலிமையான ஆயுதம்” - விஜய் ஆண்டனி

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
vijay antony about election 2024

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் ரோமியோ படத்தில் நடித்துள்ளார் விஜய் ஆண்டனி. மிருணாளினி ரவி கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை விஜய் ஆண்டனி தயாரித்துள்ள நிலையில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படம் ரம்ஜானுக்கு வெளியாகவுள்ளது. 

இதனால் படக்குழு புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கோவை, சேலம், திருச்சி ஆகிய 3 மாவட்டங்களிலும் விஜய் ஆண்டனியின் இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த இசை நிகழ்ச்சி குறித்த ஆலோசனையும், ரோமியோ படம் தொடர்பாகவும் கோவையில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் ஆண்டனி, தேர்தல் குறித்தான செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் கூறுகையில், “எல்லாரும் ஓட்டு போடுங்க. ஓட்டு போடாம இருக்காதீங்க. நோட்டாவிற்கு போடாதீங்க. பெஸ்ட்-னு யாராவது இருப்பது போல வேஸ்ட்-னும் யாராவது இருப்பாங்க. அதில் யாராவையாவது தேர்ந்தெடுங்க. ஓட்டை வீணடித்து விடாதீங்க. ஓட்டு தான் நம் கைகளில் இருக்கக்கூடிய வலிமையான ஆயுதம். அதை மிஸ் பண்ணிட்டு குறை சொல்லக் கூடாது.

ஓட்டு போடுவதற்கு முன்னாடி யாருக்கு வாக்களிக்க வேண்டும், அவர் என்ன பண்ணார் என யோசித்து ஓட்டு போடுங்கள். அரை மணி நேரமாவது யோசியுங்கள். பாதி பேர் நேரா போய் குத்திட்டு வந்துடுறாங்க. பிடித்தவங்களுக்கு ஓட்டு போடுறாங்க. அப்பாவாக இருக்கட்டும் அம்மாவாக இருக்கட்டும், நாட்டுக்கு என்ன பண்ணாங்க, நல்லது பண்ண அவங்களுக்கு என்ன தகுதி இருக்கு என யோசிங்க” என்றார். 

Next Story

மனைவி மீது ஒரு தலைக் காதல் - விஜய் ஆண்டனியின் ‘ரோமியோ’

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Vijay Antony Mirnalini Ravi Romeo trailer released

விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ரோமியோ. விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தில் யோகி பாபு, விடிவி கணேஷ், இளவரசு, தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பரத் தனசேகர் என்பவர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் இரவு காட்சியில் விஜய் ஆண்டனி கையில் சொம்பும் மிருணாளினி ரவி கையில் மதுவும் வைத்திருந்த புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. தெலுங்கில் லவ் குரு என்ற தலைப்பில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற போது, விஜய் ஆண்டனியிடம், படத்தின் போஸ்டரில் கதாநாயகியின் கையில் மது இருப்பது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “ரொம்ப நாளாகவே குடி என்பது நம்ம ஊரில் இருக்கிறது. முன்பு சாராயம், திராட்சை ரசம் என்ற பெயரில் குடிச்சிட்டு இருந்தோம். இப்போ பார்களில் குடிக்கிறோம். 2000 ஆண்டுகளுக்கு முன்னாடியே ஜீசஸ் கூட குடிச்சிருக்கார்” என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்து பொதுவெளியில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் இல்லையெனில், அவர் வீட்டு முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமெனவும் அறிக்கை வெளியிட்டிருந்தனர். 

பின்பு இது தொடர்பாக விளக்கமளித்த விஜய் ஆண்டனி, “நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால், உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டிருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயிர் நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது” எனத் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.  விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி  இருவருக்கும் கல்யாணம் நடந்த பிறகு மிருணாளினி ரவியை ஒரு தலையாக காதலிக்க முடிவெடுக்கிறார் விஜய் ஆண்டனி. அதற்காக என்ன திட்டம் தீட்டுகிறார், அவரது முடிவு நிறைவேறியதா? என்பதை விரிவாக காமெடி கலந்த ஒரு காதல் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது.