நடிகை மஹிமா நம்பியார், 'சாட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர். அதை தொடர்ந்து குற்றம்-23 படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

Advertisment

mahima nambiyar

சசிக்குமாருடன் கொடிவீரன் படத்திலும் நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக இவர் நடித்துள்ள ஐங்கரன் படம் கூடிய விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Advertisment

இந்நிலையில் தற்போது விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் அசுரகுரு படத்தில் அவருக்கு ஜோடியாகவும் மஹிமா நம்பியார் நடித்து வருகிறார். இந்த படத்தை A. ராஜ்தீப் இயக்க JSB சதிஷ் தயாரிக்கிறார்.

alt="net" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="0cc1a141-5af1-4757-8fd1-d71cfc3f01b4" height="130" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/336x-105_15.png" width="381" />

Advertisment

இதுவரை குடும்ப பாங்கான பெண்ணாக மென்மையான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த மஹிமா, இப்படத்தில் முதல்முறையாக முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்துக்காக மஹிமா நம்பியார் நடிப்பு பயிற்சி, சண்டைப் பயிற்சி ஆகியவை மேற்கொள்வது போன்ற வீடியோ ஒன்றையும் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர். இதில் மஹிமா நம்பியார் சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்று அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.