mahima chaudry

ஷாருக்கான் நடிப்பில் கடந்த 1997ஆம் ஆண்டு வெளியான படம் பர்தேஸ். இந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக நடித்தவர் மஹிமா சௌதிரி. இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதன்பின் பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், பல படங்களில் இருந்து நீக்கவும் பட்டார்.

Advertisment

கடந்த 2006ஆம் ஆண்டு ஒருவரை திருமணம் செய்துகொண்டு 2013ஆம் ஆண்டு விவாகரத்தும் செய்துகொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.

Advertisment

சுஷாந்தின் தற்கொலைக்கு பிறகு பலரும் பாலிவுட்டில் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் எப்படி பறிபோனது போன்ற பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் மஹிமா சௌதிரி தன்னுடைய வாய்ப்புகள் பறிக்கப்பட்டதற்கு முதல் காரணம் தன்னை அறிமுகம் செய்த இயக்குனர் சுபாஷ் கைதான் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல்கள் செய்திருப்பதாகவும் அண்மையில் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். தனக்கு கிடைக்க இருந்த பல படங்களின் வாய்ப்பை காலி செய்தது சுபாஷ் கைதான் என்று தெரிவித்துள்ளார். அவர் குறித்து போலீஸில் புகாரளித்தும் எதுவும் நடக்கவில்லை, அவர் சட்டத்தை தன் பணபலத்தால் காலி செய்துவிட்டார் என்று குறிப்பிட்டுள்ளார்.