Advertisment

"அனைத்தும் திடீரென்று போய்விட்டது" - மகேஷ்பாபு உருக்கம்

mahesh babu tweet about his father

Advertisment

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, தொடர்ந்து தனது குடும்பத்தினரை இழந்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் அவரது அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார். இதையடுத்து மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கடந்த 15ஆம் தேதி அவரது தந்தையும் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மகேஷ்பாபு தனது தந்தை மறைவையொட்டி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீங்கள் வாழும்போது உங்களைக் கொண்டாடினார்கள். மறைந்த பின் இன்னும் கொண்டாடுகிறார்கள். இதுவே உங்கள் மகத்துவம். தைரியமும் துணிச்சலும் உங்கள் இயல்பிலேயே உள்ளது. நான் பார்த்த அனைத்தும் திடீரென்று போய்விட்டது. என்னுள் இதுவரை இல்லாத ஒரு வலிமையை இப்போது உணர்கிறேன். மேலும் பயமின்றி இருக்கிறேன்.

உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது பிரகாசிக்கும். ஆனால், இப்போது எனக்கு எந்தப் பயமும் இல்லை. உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது ஒளிரும். உங்களை மேலும் பெருமை அடையச் செய்வேன். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். லவ் யூ நான்னா...மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

mahesh babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe