Skip to main content

"அனைத்தும் திடீரென்று போய்விட்டது" - மகேஷ்பாபு உருக்கம்

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

mahesh babu tweet about his father

 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, தொடர்ந்து தனது குடும்பத்தினரை இழந்து ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளார். இந்தாண்டு தொடக்கத்தில் அவரது அண்ணன் ரமேஷ் பாபு மாரடைப்பால் காலமானார். இதையடுத்து மகேஷ்பாபுவின் தாயார் இந்திரா தேவி வயது மூப்பு காரணமாக ஒன்றரை மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கடந்த 15ஆம் தேதி அவரது தந்தையும் பழம்பெரும் நடிகரான கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் மிகுந்த வருத்தத்தில் இருக்கும் மகேஷ் பாபுவிற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

 

இந்நிலையில் மகேஷ்பாபு தனது தந்தை மறைவையொட்டி உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நீங்கள் வாழும்போது உங்களைக் கொண்டாடினார்கள். மறைந்த பின் இன்னும் கொண்டாடுகிறார்கள். இதுவே உங்கள் மகத்துவம். தைரியமும் துணிச்சலும் உங்கள் இயல்பிலேயே உள்ளது. நான் பார்த்த அனைத்தும் திடீரென்று போய்விட்டது. என்னுள்  இதுவரை இல்லாத ஒரு வலிமையை இப்போது உணர்கிறேன். மேலும் பயமின்றி இருக்கிறேன்.

 

உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது பிரகாசிக்கும். ஆனால், இப்போது எனக்கு எந்தப் பயமும் இல்லை. உங்கள் வெளிச்சம் எப்போதும் என்மீது ஒளிரும். உங்களை மேலும் பெருமை அடையச் செய்வேன். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வேன். லவ் யூ நான்னா...மை சூப்பர் ஸ்டார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“இனி நீங்கதான் என் அப்பா அம்மா” - எமோஷ்னலான மகேஷ் பாபு

Published on 10/01/2024 | Edited on 10/01/2024
mahesh babu emotional speech in Guntur Kaaram  event

மகேஷ் பாபு, ஸ்ரீ லீலா நடிப்பில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குண்டூர் காரம். எஸ். ராதா கிருஷ்ணா தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். சங்கராந்தி விழாவை முன்னிட்டு வருகிற 12 ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. இதனால் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திராவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். அப்போது மகேஷ் பாபு, ரசிகர்கள் தான் எனக்கு இனி அப்பா அம்மா என எமோஷ்னலாக பேசியுள்ளார். 

அவர் பேசுகையில், “சங்கராந்தி விழா எனக்கு எப்போதுமே ஸ்பெஷல். என்னை விட, என் அப்பா கிருஷ்ணாவுக்கு இது ஸ்பெஷல். என் படம் சங்கராந்திக்கு ரிலீஸ் என்றால், அது நிச்சயம் பிளாக்பஸ்டர் ஆகிடும். அது இந்த வருடமும் தொடரும். ஆனால் இந்த சங்கராந்தி எனக்கு புதிது. ஏனென்றால் என் அப்பா எங்களுடன் இல்லை. அவர் ஒவ்வொரு முறையும் எனக்கு போன் செய்து என் படத்தின் வசூல் பற்றி பேசுவார். அதை கேட்கும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். நான் எப்போதும் அந்த போனுக்காக காத்திருப்பேன். 

ஆனால் இப்போது ரசிகர்களாகிய நீங்கள்தான் எனக்கு அதை சொல்ல வேண்டும். இனிமேல் நீங்கதான் என் அப்பா, நீங்கதான் என் அம்மா. நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்கள் ஆசீர்வாதம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு மகேஷ் பாபுவின் அண்ணன் ரமேஷ் பாபு, தாயார் இந்திரா தேவி மற்றும் தந்தையார் கிருஷ்ணா ஆகியோர் காலமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் சம்யுக்தா

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

samyuktha to pair witha mahesh babu

 

திரிவிக்ரம் ஸ்ரீ னிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வரும் படம் 'குண்டூர் காரம்'. இப்படத்தில் கதாநாயகிகளாக பூஜா ஹெக்டே மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் கமிட்டாகியிருந்தனர். ராதா கிருஷ்ணா தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இப்படத்தின் வீடியோ ஒன்று மகேஷ் பாபுவின் தந்தையான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. 

 

இப்படத்தில் இருந்து பூஜா ஹெக்டே விலகியுள்ளதாகத் தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. கால்ஷீட் பிரச்சனை எனச் சொல்லப்படுகிறது. மேலும் இசையமைப்பாளர் தமனும் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜா ஹெக்டேவுக்கு பதில் சம்யுக்தா நடிக்கவுள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

 

மலையாள நடிகையான சம்யுக்தா, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தாண்டு தெலுங்கில் தனுஷுக்கு ஜோடியாக 'சார்' மற்றும் சாய் தரம் தேஜூக்கு ஜோடியாக 'விருபக்‌ஷா' உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.