Advertisment

போலிச் செய்திகளைப் பரப்புபவர்கள் மீது சூப்பர் ஸ்டார் காட்டம்...!

உலகம் முழுவதும் கரோனா வைரசால், சுமார் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82,000-ஐ கடந்துள்ளது. மேலும், 3,02,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.இந்தியாவைப் பொருத்தவரை இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்துள்ளனர்.மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர்.

Advertisment

mahesh babu

இந்நிலையில் உலகம் முழுவதும் சுகாதார தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டுதெலுங்கு சூப்பர் ஸ்டார்மகேஷ் பாபுதனதுஇன்ஸ்டாகிராமில் ஒரு நீண்ட பதிவைப் பதிவிட்டுள்ளார்.

அதில், "ஊரடங்கு அமலுக்கு வந்து இரண்டு வாரங்களாகிவிட்டது.ஆனாலும், நாம் வலிமையாக இதைக் கடைப்பிடித்து வருகிறோம்.நமது அரசாங்கங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளைப் பெரிதும் பாராட்டுகிறேன்.

Advertisment

உலக ஆரோக்கிய தினமான இன்று 07-08-20), கோவிட்-19க்கு எதிரான போரில், நாம் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும்,களத்தில் முன்னணியில் இருப்பவர்களுக்கு நன்றி சொல்வோம்.

இந்தச் சுகாதாரச் சிக்கல் இருக்கும் சூழலில், நம் உயிரை, அவர்கள் உயிரை விட அதிகமாக மதித்து,தெருக்களில்,மருத்துவமனைகளில் உழைக்கும் அனைத்து தைரியமான போர் வீரர்களுக்கும் என் மரியாதைகளும்,வணக்கங்களும். உங்கள் அனைவரையும் இறைவன் ஆசிர்வதிக்கட்டும்.

சமூக விலகல், சுகாதாரத்தைப் பேணுதலைத் தாண்டி இன்னொரு முக்கியமான விஷயத்துக்கும் நாம் கவனம் தர வேண்டும். அச்சத்திலிருந்து விலகல்.அச்சத்தை ஏற்படுத்தும் மக்கள்,செய்திகளிடமிருந்து நாம் விலகியிருக்க வேண்டும்.

போலிச் செய்திகள்தான் உண்மையான பிரச்சனை.தவறுதலாக வழிநடத்தும் தகவல்களிலிருந்து விலகியிருங்கள்.இதைப் படித்துக் கொண்டிருக்கும் அனைவரும், நேர்மறை சிந்தனை,அன்பு, நம்பிக்கை, இரக்கம் ஆகியவற்றைப் பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் புயலைக் கடந்து பயணிப்போம்.வீட்டிலேயே இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

corona virus mahesh babu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe