Advertisment

“அவசியம் பார்க்க வேண்டிய படம்” - மகேஷ் பாபு பாராட்டு 

mahesh babu praised dhanush raayan movie

தனுஷ் இயக்கி மற்றும் நடித்து கடந்த 26ஆம் தேதி வெளியான திரைப்படம் ராயன். சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தனுஷின் 50வது திரைப்படம் என்பதால் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

Advertisment

இதையடுத்து படத்திற்குக் கிடைத்த வரவேற்பு குறித்து தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தின் வாயிலாக நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டார். அதில் , “எனது ஆதரவுத் தூண்களான ரசிகர்களாகிய நீங்கள் பொழிந்த எல்லா ஆசீர்வாதங்களுக்கும் நன்றி. இதுதான் எனக்கு சிறந்த பிளாக்பஸ்டர் பிறந்தநாள் பரிசு” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே திரைப் பிரபலங்கள் இப்படத்திற்கும் தனுஷிற்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ், “நமது துறைக்கு சர்வதேச அளவிலான இயக்குநர் கிடைத்துள்ளார்” என எக்ஸ் பக்கத்தில் தனுஷை பாராட்டினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்தார்.

Advertisment

mahesh babu praised dhanush raayan movie

இந்த நிலையில் தெலுங்கு முன்னணி நடிகர் மகேஷ் பாபு, தனுஷிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ராயன் படத்தில் தனுஷ் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அற்புதமாக இயக்கியும் உள்ளார். எஸ்.ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷன் உள்ளிட்ட மொத்த படக்குழுவும் சிறப்பாக நடித்துள்ளனர். பின்னணி இசையில் ஏ.ஆர் ரஹ்மான் மிரட்டியிருக்கிறார். அவசியம் பார்க்க வேண்டிய படம்” எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு தனுஷும் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

mahesh babu Raayan actor dhanush
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe