தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் காலமானார். பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயாருமான இந்திரா தேவி வயது முதிர்வு காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். பின்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி(70) உடல் நிலை குறைவு காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். அவரது உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் ரசிகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் பின்னர் மகா பிரஸ்தானத்தில் இறுதி சடங்குகள் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்திரா தேவியின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.