/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1103.jpg)
தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மகேஷ் பாபு. இவரின் ஹிட் படங்களான போக்கிரி, கில்லி உள்ளிட்டவை தமிழில் விஜய் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்காரு வாரி பாட்டா படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்தாக இயக்குநர் ராஜமௌலி இயக்கும் படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் மகேஷ் பாபுவும் அவரது மனைவி நம்ரதாவும் மைக்ரோஸாஃப்ட் நிறுவனரும், உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸை சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தைத் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த மகேஷ்பாபு, "பில்கேட்ஸை சந்தித்தது மகிழ்ச்சி. உலகம் இதுவரை கண்ட தொலைநோக்கு பார்வையாளர்களில் இவரும் ஒருவர். மிகவும் அடக்கமான இவர் உண்மையில் ஒரு உத்வேகம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)