mahesh babu guest role vijay starring thalapathy66 film

பிரபல தெலுங்கு இயக்குநர்வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன்இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதைபோன்றுகுடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் தளபதி 66 படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரபல தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுநடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தளபதி 66 படத்தில் கௌரவ தோற்றத்தில் மகேஷ் பாபுவை நடிக்க வைக்க இயக்குநர்வம்சி அணுகியதாகவும், அதற்கு அவரும்ஓகே சொல்லி உள்ளதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. தெலுங்கு திரையுலகில் வம்சியும், மகேஷ் பாபுவும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். இவர்களதுகூட்டணியில் வெளியான மகரிஷிபடம் பெரும்வெற்றி பெற்றதோடுஇரண்டு தேசிய விருதுகளையும் வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisment